நடிகர் விசுவின் இறுதி சடங்கு குறித்து தவறான செய்தி! நடிகர் கொடுத்த பதிலடி- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
Tags: ACtor, Director, Tamil cinema, Visu

நடிகர், இயக்குனர், எழுத்தாளர், நாடகம், தொகுப்பாளர் என பல திறமைகளை கலையுலகத்தில் வெளிப்படுத்தியவர் இயக்குனர் விசு.
இயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றவர். சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவருக்கு முதல் படம் ரஜினி நடித்த தில்லு முல்லு.
கண்மணி பூங்கா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பின் மணல் கயிறு, புதிய சகாப்தம், சிதம்பர ரகசியம் ஆகிய படங்களை இயக்கினார். பின் சீரியல்களிலும் நடித்து வந்தார்.
72 வயதாகும் அவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. அவர் நேற்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
அவருக்கு மூன்று மகள் இருக்கிறார்கள். மூவருமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்கள். அவர் நேற்று காலமானார்.
தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கி வருவதால் விசுவின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வெளிநாட்டில் இருக்கும் அவரின் மகள்களுக்கு கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாக செய்தி சானல் ஒன்று பதிவிட்டிருந்தது.
இதற்கு நடிகர் எஸ்.வி.சேகர், விசுவின் மகள்கள் தற்போது சென்னையில் இருப்பதாக கூறியுள்ளார். பொய்யான செய்தியை வெளியிட்ட நிறுவனம் மீது தன் கோப உணர்ச்சியை காட்டியுள்ளார்.
ரசிகர்கள் அந்த பொய்யான செய்தி பதிவிட்டவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
132 total views, 3 views today